தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்

Social Democratic Party of Tamils (SDPT) (Pathmanabha EPRLF) held its congress on the 21st and 22nd of April 2024 at “Thanthai Selva Auditorium” in Jaffna.Regional leaders from all five administrative districts of Northern and Eastern provinces – Ampara, Batticaloa. Trincomalee, Vanni and Jaffna- and delegates from party branches in Europe and Canada participated. 48 delegates participated including Muslim delegates from Ampara and Vanni.

நடக்கப்போவது என்ன தேர்தல்?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியா, ரஷ்யாவுக்கு

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவின் Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airports of Regions Management Company அல்லது அதன் துணை நிறுவனங்கள் 30 வருட காலத்திற்கு நிர்வாகத்தை மாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை விற்ற உறவினர்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். 

’இலங்கைப் புத்தாண்டு’ க்கு அத்திபாரம் இடுவோம்

எந்தவொரு கலாசாரத்திலும் கலாச்சார விழாக்கள் மிக முக்கியமான பகுதியாகும். அதன்படி, இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் கலாசார வாழ்வில் புத்தாண்டு மிகவும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும். சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் முக்கியமாக சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அம்சங்களைக் கையாளும் போது மக்கள் பல்வேறு முரண்பாடுகளை அனுபவிப்பது இயல்பானது.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஈரானுக்கும்  இலங்கைக்கும்  இடையிலான இருதரப்பு  உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. 

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்

யாழ்நகரில் நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் முதல் நாள் அமர்வில் நடைபெற்ற நிகழ்வின் சில புகைப்படங்கள்

சுற்றுலாப் பயணிகள் விவகாரம்; விசேட சுற்றிவளைப்பு

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கும் இடம் உண்டு

இந்தியாவில் வாக்குரிமைக்கான வயது 18. ஆனால், 38 வயதில்தான் தனக்கான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார் நளினி கிருபாகரன்.
காரணம், இவர் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்.